நடிகை நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸ்!

நடிகை நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸ்!

நடிகை நயன்தாராவின் 75ஆவது திரைப்படமாக அன்னபூரணி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத்திரைப்படத்தின் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் நயன்தாராக்கு ஜோடியாக நடிகர் ஜெய் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், சத்யராஜ் கௌரவத் தோற்றத்தில் மேலும் கிங்ஸ்லி ,சுரேஷ், சக்கரவர்த்தி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இந்தப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.அன்னபூரணி திரைப்படத்தில் சத்யசூரியன் ஒளி பதிவினை மேற்கொண்டுள்ளார். மேலும் டிசம்பர் 1-ம் தேதி அன்னபூரணி திரைப்படம் ரிலீஸ் என்ற செய்தியைப் படக்குழு வெளியிட்டுவுள்ளது . தொடர்ந்து நேற்றைய தினம் அன்னபூரணி திரைப்படத்தின் டிரைலர்கள் வெளியானதில் ” பிடிச்சத பண்ணா லட்சம் பேரும் சூப்பர் ஸ்டார் ஆகலாம் “என்ற வார்த்தை வசனங்களும் இடம் பெற்றுள்ளன, இதனை ரசிகர் அனைவரும் வரவேற்று வருகின்றனர்.

Related post

சேலத்தில் நடைபெற்ற FEMI 9 நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா உரை!

சேலத்தில் நடைபெற்ற FEMI 9 நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா உரை!

சில மாதங்களுக்கு முன்பாக நடிகை நயன்தாரா FEMI 9 சானிட்டரி நாப்கின் என்ற பெயரில் ஒரு தொழிலை அறிமுகம் செய்தார். இந்தத் தொழில் நாடு முழுவதும் விநோயகம் செய்யப்பட்டு…