நடிகை ஜோதிகா தமிழக அரசின் திரைப்பட விருதினைப் பெற்றார்!

நடிகை ஜோதிகா தமிழக அரசின் திரைப்பட விருதினைப் பெற்றார்!

ென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி என் ராஜரத்தினம் கலையரங்கில் நேற்றைய தினம் (மார்ச் 6 தேதி) தமிழக அரசின் சார்பாக திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக அரசின் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுபிரமணியன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்த விழாவில் நடிகை நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் ,குறும்படம் தயாரித்த கல்லூரி மாணவர்கள் என 39 திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் 2015 ஆண்டில் வெளிவந்த 36 வயதினிலே திரைப்படத்தில் நடிகை ஜோதிகா நடித்ததுக்காக தமிழக அரசு விருது வழங்கியிருந்தது.36 வயதினிலே திரைப்படம் கணவன், குழந்தையால் ஒதுக்கப்படும் ஒரு பெண் வாழ்க்கையில் எவ்வாறு ஜெயிக்கிறார் என்பது கதை.

இந்தத் திரைப்படத்திற்குப் பிறகு பல பெண்கள் வேலையில் பணிபுரிந்து சாதித்துள்ளனர் என்று நடிகை ஜோதிகா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இவ்விழாவில் நடிகை ஜோதிகா “தான் நடித்த 36 வயதினிலே திரைப்படம் விருது பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்று மேடையில் பேசியிருந்தார்.

Related post