நடிகர் விஷாலின் அதிரடியான நடிப்பில் ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26 தேதி வெளியாகிறது!

நடிகர் விஷாலின் அதிரடியான நடிப்பில் ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26 தேதி வெளியாகிறது!

 நடிகர் விஷால் அதிரடியான நடிப்பிலும் இயக்குனர் ஹரி இயக்கத்திலும் ரத்னம் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் கௌதம் மேனன், சமுத்திரகனி மற்றும் யோகி பாபு போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்குத் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார். ஜூ ஸ்டுடியோ சவுத் மற்றும் பெஞ்ச் டோன் பிலிம்ஸ் இணைந்து இத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தத் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் கடந்த வாரத்தில் ரத்னம் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து ரத்னம் திரைப்படத்தின் ட்ரெய்லர் ஏப்ரல் 15 இன்று மாலை வெளியாகிறது. இந் நிலையில் ஏப்ரல் 26 ஆம் தேதி ரத்னம் திரைப்படம் ரிலீஸ் என்ற தகவலைப் படக்குழு தெரிவித்துள்ளது.

Related post