நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகம் !

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகம் !

  ‌நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகிறார். லைக்கா நிறுவனமானது தான் தயாரிக்கும் திரைப்படத்தின் கதையை ஜேசன் சஞ்சய் இயக்குகிறார் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.தற்போது சஞ்சய் ஜேசன்  லைக்கா நிறுவனத்துடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளார். இதனால்  ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ் காரனுடன் நட்பில் இணைந்துள்ளார். லைக்கா நிறுவனமானது நடிகர் விஜய் நடித்த கத்தி படத்தின் மூலம் தனது பணியினைத் தொடங்கி பல வெற்றி படங்களான  பொன்னியின் செல்வன், ஜெயிலர் போன்ற படங்களை வழங்கி உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்பட தயாரிப்பு டிப்ளமோ  படித்தார்.இதைத் தொடர்ந்து லண்டனில் சினிமா துறையை சார்ந்த திரைக்கதை எழுதும்  பி .ஏ ஹானர்ஸ் படிப்பினை முடித்து  குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

தற்போது நடிகர் தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா ப்ரொடெக்ஷனில் தயாரிக்கும் புதிய படத்தில் இயக்குனராக ஒப்பந்தம் செய்துள்ளார். இவருடைய கதை லைக்கா நிறுவனத்திற்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இவர் தனது படிப்பு சார்ந்த க்ரைம் ஸ்கிரிப்டை கொண்டு படத்தினைத் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் லைக்கா நிறுவனமானது கலைஞர்கள், தொழில்நுட்பம் கொண்டு மிக விரைவில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தினைத் தயாரிக்க இருப்பதாக தகவல்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

Related post

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார்!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வேட்டைக்காரன் திரைப்படத்தில் முதலில் அறிமுகமாகினார் . தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் மலையாள திரைப்பட முன்னணி நடிகரான துல்கர் சல்மான் கதாநாயகனாக…
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170ஆவது திரைப்படத்தில் வில்லனாக ராணா டகுபதி!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170ஆவது திரைப்படத்தில் வில்லனாக ராணா டகுபதி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-ஆவது திரைப்படத்தின் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்போது லைக்கா நிறுவனத்தில் சூப்பர்…
பிரல நடிகருமான, இயக்குனருமான மாரிமுத்து இன்று காலமானார்!

பிரல நடிகருமான, இயக்குனருமான மாரிமுத்து இன்று காலமானார்!

பிரபல நடிகருமான இயக்குனருமான மாரிமுத்து இன்று காலமானார். இவரின் வயது 57. இவர் சினிமா துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியவர்.…