நடிகர் விஜய்யின் அதிரடியான நடிப்பில் லியோ திரைப்படம்!

நடிகர் விஜய்யின் அதிரடியான நடிப்பில் லியோ திரைப்படம்!

 தளபதி விஜய் அவர்களின் அதிரடியான நடிப்பில் லியோ படம் உருவாகி வருகிறது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் உருவாகியுள்ளது. லியோ   படத்தில் 40 வயதிலும் இளமை மாறாத த்ரிஷா  கதாநாயகியாக நடித்துள்ளார். தளபதி 67 என்ற தற்காலிக தலைப்பில் ஜனவரி 2023 இப்படம்  தொடங்கப்பட்டது  .பிறகு இந்த படத்தின் தலைப்பு  ‘லியோ ‘என அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.   செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இப்படத்தில்  அனிருத் இசையமைத்துள்ளார்.மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராகப் படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பினை வழங்கியுள்ளார்.   அர்ஜுன்,சஞ்சய் தத் , பிரியா ,ஆனந்த், மன்சூர் அலிகான் ,மிஷ்கின் ,கௌதம் வாசுதேவ மேனன், சாண்டி மற்றும் மேத்யூ தாமஸ் ஆகிய சக நடிகர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லியோ படத்தின் படப்பிடிப்புகள் பல இடங்களில் நடைபெற்ற நிலையில் இன்று சென்னையில் லியோ திரைப்படத்தின் இறுதி பாடலின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கான 2000 நடன கலைஞர்களுடன் ரிகர்சல் முடிந்து விட்டது. லியோ படத்தின் வெளிநாட்டு உரிமங்கள் ரூ 60 கோடி மற்றும் கேரள உரிமங்கள் ரூ 16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது. ஜூன் 22 விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலக திரையரங்கில் வெளியாகும் அதிகாரப்பூர்வமாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக  பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தொடக்கம்!

விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக பொது மக்களுக்கு நலத்திட்ட…

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு, சேப்பாகம்-திருவல்லிக்கேணி பகுதியில் அன்னதானம், கோயம்பேடு ரோகினி திரையங்கம்…
தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் .இதை தொடர்ந்து பல அரசியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு…
தமிழக வெற்றி கழகம்-  நடிகர் விஜய் அறிவிப்பு !

தமிழக வெற்றி கழகம்- நடிகர் விஜய் அறிவிப்பு !

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்துள்ளார். பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும் என அரசியலில் செயல்படுவேன்! என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற…