நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் பாடல் வெளியீடு!

நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் பாடல் வெளியீடு!

நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார்.( ஜூன் 22 )இன்று விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை நா ரெடி என்ற பாடலை படக்குழு வெளியிட உள்ளது. இப்பாடலை அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் உற்சாகம்   ஏற்படுத்தும் வகையில் விஜய்  ‘நா ரெடி ‘என்ற பாடலை சிறப்பாக  பாடி அசத்தியுள்ளார். இப்பாடலின் பாடல் வரிகள் லோகேஷன் உதவி இயக்குனர் விஷ்ணு எழுதியுள்ளார். இப்பாடலில் அர்ஜுன், மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் இணைந்து நடனமாடியுள்ளனர். 

நடிகர் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று  நள்ளிரவு 12 மணியளவில் லியோ படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. இந்தப் போஸ்டரில் நடிகர் விஜய் ரத்தம்  தெறிக்க சுத்தியல்  ஒன்றை கையில் வைத்துள்ளார் . எனவே லியோ திரைப்படம் ஆக்சன் திரில்லரான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லியோ படத்தின் கார் ஒன்றில் விஜய் இருப்பது போல் அனிமேட்டட் வீடியோ வைரலாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.இதைத்தொடர்ந்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் லியோ படக்குழு தெரிவித்துள்ளது.

Related post

தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் .இதை தொடர்ந்து பல அரசியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு…
தமிழக வெற்றி கழகம்-  நடிகர் விஜய் அறிவிப்பு !

தமிழக வெற்றி கழகம்- நடிகர் விஜய் அறிவிப்பு !

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்துள்ளார். பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும் என அரசியலில் செயல்படுவேன்! என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற…
நடிகர் விஜய்யின் 68 திரைப்படத்திற்கு GOAT  தலைப்பு!

நடிகர் விஜய்யின் 68 திரைப்படத்திற்கு GOAT தலைப்பு!

நடிகர் விஜய் தனது 68 ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 2023 டிசம்பர் 31 தேதியே நடிகர் விஜயின் 68-ஆவது திரைப்படத்தின்…