நடிகர் விக்ரமனின் துருவ நட்சத்திரம் 2 ஆவது பாடல் வெளியீடு. துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகி உள்ளது.நடிகர் விக்ரம் துருவ நட்சத்திர திரைப்படத்தில் நடித்து வருகிறார். துருவ நட்சத்திரம் திரைப்படம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தில் ரித்திக் வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். ராதாகிருஷ்ணன் ,பார்த்திபன், , சுகுமாறன், ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்யதர்ஷினி போன்ற திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பால் இப்படத்தின் பாடல்கள் உருவாகி வருகின்றன. இப்படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதை தொடர்ந்து இன்று காலை 11:00 மணியளவில் ‘His name is John’ ‘ நீ கெத்தா கொஞ்சம் பார்த்தா’ மாஸான பாடல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்தத் திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் செய்வதற்கான பணிகள் இயக்குனர் கௌதம் வாசுதேவன் செய்து வருகிறார்.
