நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வெகு விரைவில்!

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வெகு விரைவில்!

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் எனப் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், கதாநாயகி ப்ரித் சிங் , மற்றும் ரவிக்குமார் இயக்கத்திலும், ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான ‘வேற லெவல் சகோ ‘எனும் பாடல் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் அன்று படக்குழுவினரால் வெளியானது. படத்தில் யோகி பாபு ,பால சரவணன், இஷா கோபிகா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வேற்றுக்கிரகவாசியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாக உள்ளது. அயலான் படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே. கே.ஆர் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ளது. 75 விழுக்காடு படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்ட நிலையிலும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். , இப்படம் தமிழ் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில்        அதிகளவில் கிராபிக்ஸ் காட்சிகளும், 4500 க்கு மேற்பட்ட வி எஃப்.எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய லைவ் ஆக்சன் திரைப்படமாக  உருவாக்கபட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த இப்படம் வருகிற 2023 ஆண்டு தீபாவளி (நவம்பர் 12)அன்று ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன்  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related post

சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயனின் எஸ் கே 23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்தத் திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படம் படபூஜையுடன் தொடங்கப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட…
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது .!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது…

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. குரங்கு பெடல் திரைப்படத்தைக் கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் காளி வெங்கட் ,சந்தோஷ் வேல்முருகன், வி…
சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் செப்டம்பரில் 27இல்  ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் செப்டம்பரில் 27இல் ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இத் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் பீலிங்ஸ்…