நடிகர் சந்தானம் ‘ கிக் ‘திரைப்படம் செப்டம்பர் 1 ரிலீஸ்

நடிகர் சந்தானம் ‘ கிக் ‘திரைப்படம் செப்டம்பர் 1 ரிலீஸ்

நடிகர் சந்தானம் கிக் திரைப்படத்தில் நடிக்கிறார். கன்னட சினிமாவில் பல ஹிட் படங்களைக் கொடுத்த பிரசாந்த் ராஜ் ‘கிக்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். கிக் திரைப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தனியா ஹோப் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் தம்பி ராமையா, செந்தில், மன்சூர்அலிகான், மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரன், கூல் சுரேஷ் போன்ற திரை நட்சத்திரங்கள் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தைப் பார்ச்சூன் நிறுவனம் தயாரித்துள்ளது. கிக் திரைப்படம் மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் நகைச்சுவை கதையைக் கொண்ட முழு நீளப் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

கிக் திரைப்படக்  காட்சிகள் பெங்களூர் ,சென்னை, பாங்காங் போன்ற இடங்களில் படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.கிக் திரைப்படத்தின் டிரைலர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்தத் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நிறைவடைந்து உள்ளன என்று தகவல்கள் வெளியான நிலையில் செப்டம்பர் 1 தேதி கிக் திரைப்படம் ரிலீஸ் என்று படக் குழு  தெரிவித்துள்ளது.

Related post

வெப்பன்  திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

வெப்பன் திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

 சத்யராஜ், வசந்த் ரவி இணைந்து நடிக்கும் வெப்பன் திரைப்படத்தைக் குகன் சென்னியப்பன் இயக்க மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பாக எம் எஸ் மன்சூர் தயாரிக்கிறார். மேலும் வெப்பன் திரைப்படத்தில் ஜிப்ரான்…
நடிகர் விஜய் தேவர் கொண்டாவின்  ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் விஜய் தேவர் கொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் டிசம்பர் 5ஆம்…

விஜய் தேவர் கொண்டா ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவர் கொண்டா ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். பரசுராம் பெட்லா இயக்கியுள்ளார்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்…
காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் போர் திரைபடம் மார்ச் 1   இன்று ரிலீஸ்!

காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் போர் திரைபடம் மார்ச் 1 இன்று ரிலீஸ்!

காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜுன் தாஸ் இருவரும் இணைந்து நடிக்கும் (POR MOVIE )போர் திரைப்படம் இன்றைய தினம் அனைத்து திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் பிஜோய் நம்பியார்…