நடிகர் சங்கத்தின் கட்டிடம் விரைவில் துவக்கம்-நடிகர் சங்கத்தின் தலைவர்கள் அறிவிப்பு!

நடிகர் சங்கத்தின் கட்டிடம் விரைவில் துவக்கம்-நடிகர் சங்கத்தின் தலைவர்கள் அறிவிப்பு!

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராசர் அரங்கத்தில் 67-ஆவது நடிகர் சங்கப்பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நடிகர் சங்கப் பொதுக் கூட்டத்தில் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்திக் கலந்து தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் வங்கி கடன் 40 கோடி பெற்று கட்டிடத்தைக் கட்டி முடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் தெரிவித்தார்.

இதற்காக நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களிடமிருந்து நன்கொடைகளைத் திரட்டி கட்டிடம் விரைந்து முடிக்கப்படும் என நடிகர் சங்கத்தின் தலைவர்கள் தெரிவித்தனர். மேலும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் நிதிகளைத் திரட்ட போவதாகவும் நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்தார். மேலும் நடிகர் சங்கச் செயலாளர் நடிகர் சங்கக் கட்டிடம் விரைந்து கட்டி முடிக்கப்படும் எனத் தெரிவித்துடன் ,அடுத்த பொதுக்கூட்டம் நடிகர் சங்கக் கட்டிடத்தில் நடைபெறும் எனத் தெரிவித்தார். இந்தக் சங்கத்தின் 67-ஆவது பொதுக்குழு கூட்டத்தில் நடிகர்கள் பல பங்கேற்று கலந்து கொண்டனர்.

Related post