இந்தியாவில் அனைத்து தொழில் துறைகளிலும் பெண்களே சாதனை படைத்து வருகின்றனர் என்று MSME அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்திய பெண்கள் தொழில் செய்வதை ஊக்குவதற்காக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில் எம் எஸ் எம் இ துணை அமைச்சகம் பல்வேறு திட்டங்களக் கொண்டு வந்துள்ளது. இதனால் இந்தியாவில் குறு சிறு ,நடுத்தர தொழில் நிறுவனங்களில் பெண்களே அதிகளவில் காணப்படுகின்றனர்.
மேலும் பெண்கள் பாரம்பரிய கைவினை கலைஞர்கள் தொழிலிலும் சிறந்து விளங்குகின்றனர் . இந்தியாவில் 20% விழுக்காடு தொழில் நிறுவனங்களில் உரிமையாளர்களாகவே பெண்களே உள்ளனர் என்று எம் எஸ் எம் இ அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் மணிப்பூரில் உள்ள பெண்கள் தொழில்துறையில் 50 % விழுக்காடு பெற்று முதலிடத்தில் பெற்றுள்ளனர். தொழில்துறையில் பொறுத்தவரை தமிழ்நாட்டில் பெண்கள் 27 % விழுக்காட்டினை பெற்றும் ,குஜராத் 26% பெற்றும், கேரளா 23% பெற்றும் வளர்ந்து வருவதாக மத்திய எம் எஸ் எம் இ அமைச்சகம் தகவலினைத் தெரிவித்துள்ளது.