தேவர் குருபூஜையை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகள் மூடல்!

தேவர் குருபூஜையை முன்னிட்டு டாஸ்மார்க்  கடைகள் மூடல்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுபொன்னில் வருகிற 30-ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜை விழா நடைபெறுகிறது. இந்தத் தேவர் குருபூஜை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்ளார். அரசின் பல அதிகாரிகளும் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க உள்ளதால் ஆய்வுப் பணிகள் பசும்பொன்னில் நடைபெற்று வருகின்றன.. இந்நிலையில் பொது அமைதிக்காக சட்ட ஒழுங்கின் அடிப்படையில் வருகிற 28 ,29, 30 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகின்றன.

மேலும் மதுரை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலும் டாஸ்மார்க் கடைகள் மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவினை அளித்துள்ளனர். அதனை மீறியும் மது பானங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related post

சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர்களின் 222 ஆவது நினைவு நாள் விழா !

சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர்களின் 222 ஆவது நினைவு நாள் விழா…

சிவகங்கை மாவட்டத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் நினைவு நாள் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 2023 வருகிற அக்டோபர் 27ஆம் தேதியில் சிவகங்கை மாவட்டத்தில்…