தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் விரைவில்!

தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் விரைவில்!

பல ஆண்டுகளுக்கு முன்னாகவே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குக் கட்டுமான பணியில் ரூபாய் 40 கோடி நிதி தேவைப்படுவதாக நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எனவே வங்கிகளின் மூலம் கடன் வாங்கி நிதிகளைப் பெறுவது, வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது , பெரிய நடிகர்களிடம் நன்கொடைகள் பெறுவது மூலம் தென்னிந்திய நடிகர் சங்கத்தைக் கட்ட நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் முடிவு செய்து திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் ரூ1கோடி, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ரூ1கோடி, நடிகர் விஜய் ரூ 1கோடி என நன்கொடையாக நிதியுதவி வழங்கி உள்ளனர். இந்த நன்கொடைகளைத் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் பொருளாளர் கார்த்திக் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து நிதியுதவி செய்த நடிகர்களுக்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார நன்றியைத் தெரிவித்து விரைந்து முடிக்க நடிகர் சங்க நிர்வாகிகள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related post