தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயில் மற்ற கோவில்களை விட தனிச்சிறப்பு வாய்ந்தது. மற்ற கோவில்களில் அம்மனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு குங்குமம் வழங்கப்படுவதே வழக்கம். ஆனால் இந்தச் சங்கரன் திரௌபதி அம்மன் கோயிலில் மஞ்சள் வழங்கப்படுகிறது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு மே 31 கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட்டது. ஜூன் 1,2,3 நாட்களில் திரௌபதி அம்மனுக்கு  சிறப்புபூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து ஜூன் 4,5 தேதி கரகம், ஜூன் 7 -ம் தேதி அர்ஜுனன் தபசு, ஜூன் 8-ம் தேதி திரௌபதி அம்மன் கூந்தல் முடிப்பு, ஜூன் 9 ஆம் தேதி பூக்குழி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றதில்  ஆண்கள் ,பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள் என 150க்கு மேற்பட்டோர் பூக்குழி திருவிழாவில் இறங்கி தனது வேண்டுதலை நிறைவேற்றினர். ஜூன் 10ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, ஜூன் 11ஆம் தேதி ஊஞ்சல் திருவிழா நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று (ஜூன் 13) பால்குடம் நடைபெறுகிறது. இந்த பூக்குழி திருவிழா 12 நாட்களாக நடைபெற்றதில் (ஜூன் 13) இன்று நிறைவடைகிறது. இங்கு பஞ்சபாண்டவர்களான தர்மன்,பீமன் ,அர்ஜுனன், சகாதேவன், நகுலன் போன்றவர்களின் சிலைகளுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன.      

Related post

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் குளிக்கத் தடை!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் குளிக்கத் தடை!

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கோடை விடுமுறை என்பதால் தென்காசியில் உள்ள குற்றால மெயின் அருவி பழைய குற்றால அருவி மற்றும் ஐந்தருவிகளுக்குச்…