தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் குளிக்கத் தடை!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் குளிக்கத் தடை!

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கோடை விடுமுறை என்பதால் தென்காசியில் உள்ள குற்றால மெயின் அருவி பழைய குற்றால அருவி மற்றும் ஐந்தருவிகளுக்குச் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துக் கொண்டே வந்தது.தென்காசியில் கனமழை காரணமாக குற்றால மெயின் அருவி ஐந்தருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது.

எனினும் தென்காசியில் உள்ள பழைய குற்றால அருவியில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டனர். பழைய குற்றாலத்தில் காற்று வீசத்துடன் வெள்ளப்பெருக்கு திடீரென ஏற்பட்டதில் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து ஓடினர் . நெல்லையைச் சேர்ந்த 17 வயசு சிறுவன் அஸ்வின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தான். இச்சம்பவம் காரணமாக குற்றால அருவிகளுக்குக் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தென் மாவட்டங்களுக்கு உள்ள அருவிகளில் இரண்டாவது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related post

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயில் மற்ற கோவில்களை விட தனிச்சிறப்பு வாய்ந்தது. மற்ற கோவில்களில்…