தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்தத் திருத்தத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திர நாளில் ஆடி தபசு திருவிழா மிக முக்கிய பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் சங்கரன் கோவிலில் 2024 ஜூலை 11-தேதி ஆடி தபசு விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி தபசு நாளான ஜூலை 21ஆம் தேதி ஞாயிற்று கிழமை நாளை நடைபெற்றதால் தேரோட்டத்தை முன்னிட்டு நகராட்சி சார்பில் ரதவீதிகள் சுத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து தண்ணீர் சேர்த்து தெளிக்கப்பட்டுள்ளது .
இதற்கான பாதுகாப்புகாக 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.இவ்விழாவின் 12 நாட்களும் கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் தினமும் காட்சியளிக்கிறார்.இவ்விழாவில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.