தூரிகைகளின் வேந்தர்’ பிரபல ஓவியர் மாருதி காலமானார்!

தூரிகைகளின் வேந்தர்’ பிரபல ஓவியர் மாருதி காலமானார்!

தூரிகைகளின் வேந்தர்’ பிரபல ஓவியர் மாருதி காலமானார்! ‘தூரிகைகளின் வேந்தர்’ பிரபல ஓவியர் மாருதி காலமானார். பிரபல ஓவியர் மாருதி புதுக்கோட்டையில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் பி.ரங்கநாதன் . ஓவியர் மாருதி அவர்களின் வயது 86. தற்போது மாருதி அவர்கள்  புனே நகரில் அவரது மகளின் வீட்டில் வசித்து வந்த நிலையில் உடல் நலக்குறைவால் (ஜூலை 27 ) நேற்றைய தினம் வியாழக்கிழமை 2.30 மணியளவில் உயிரிழந்தார். 1969 முதல்  வார இதழ்களான குங்குமம் ,குமுதம் போன்ற இதழ்களில் வரைந்து புகழ் பெற்றவர்.

இவர் தமிழக அரசால் கலைமாமணி விருது பெற்றவர். இவர் ஓவியத்தில் செய்த சாதனையைக் கண்டு ஓவியர்கள் சார்பாக ‘தூரிகைகளின் வேந்தர்’ என்ற பட்டத்தையும் பெற்றவர். ஓவியர் மாருதி தான் வரைந்த  ஓவியத்தால் வாசகர்களின்  வரவேற்பைப் பெற்றவர்.தனது இறுதி மூச்சு வரை ஓவியம் வரையாமல் விடாது தொடர்ந்து பயணம் செய்தவர்  ஓவியர் மாருதி.   அவர் மறைந்தாலும், அவர் வரைந்த ஓவியங்கள்   உயிர் கொடுத்து பேசும் வகையில்  என்றென்றும்  உலகப் புகழ்பெற்று நிலைத்து நிற்கும்.

Related post

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்!

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்!

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்! கேரள மாநிலம் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை (4.25) மணியளவில் காலமானார். இவரின் வயது…
திரை உலக  இயக்குனர் மனோபாலா இன்று காலமானார்!

திரை உலக இயக்குனர் மனோபாலா இன்று காலமானார்!

திரை உலக  இயக்குனர் மனோபாலா (69வயது) இன்று காலமானார் .  தமிழ் திரைப்பட உலகில் இயக்குனர், நடிகருமான மனோபாலா இன்று (மே 3) உடல் நலக்குறைவால் காலமானார். மனோபாலா…