தூத்துக்குடி மாவட்டத்தில் குலசை தசரா திருவிழா கோலாகலம்

தூத்துக்குடி மாவட்டத்தில் குலசை தசரா திருவிழா கோலாகலம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் அமைந்துள்ளது. முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா 12 நாட்களாக மிக சிறப்பாக நடைபெறுகிறது. முத்தாரம்மன் கோயிலில் முதல் நாளாக நேற்று அக்டோபர் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு காளி பூஜையும், எனஅன்னதானமும் வழங்கப்பட்டது.இந்தத் திருவிழாவின் முதல் நாளில் முத்தாரம்மன், துர்கை அம்மன் அலங்காரத்திலும், 2 ஆம்நாளாக விஸ்வகாமேஸ்வர் அலங்காரத்திலும், 3-ஆம் நாளாக பார்வதி அம்பிகையாக எழுந்தருளிப்பார். அடுத்து வரும் 4ஆம் நாளாக பால சுப்பிரமணியர் அலங்காரத்திலும், 5ஆம் நாளாக நவநீதகிருஷ்ணர் அலங்காரத்திலும் ,6ஆம் நாள்- மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும், 7ஆம் நாள்- ஆனந்த நடராஜராக தரிசனம் அளிப்பார். 8ஆம் நாள்- கஜலெட்சுமி அலங்காரமும், 9ஆம் நாள் கலைமகள் அலங்காரத்திலும் எழுந்தருளிவார்.

10 ஆம் நாளாக அன்னை முத்தாரம்மன் மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்வாக அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறும்.இதைத் தொடர்ந்து அக்டோபர் 25, 26 தேதிகளில் முத்தாரம்மன் அம்மனுக்கு ஆராதனைகள் பாலாபிஷேகம், புஷ்ப அலங்கார வழிபாடுகள் மிகச் சிறப்பாக நடைபெறயுள்ளது. இவ்விழாவின் ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்டம் இந்து அறநிலை துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related post

தமிழகத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை  வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!

தமிழகத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை வருகிற 28ஆம் தேதி…

ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ ஹரி கோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் நிறுவனம் அமைந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்காக இஸ்ரோவின் நிபுணர்களின் கோரிக்கைகளின் நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான…