துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆப் கோதா’ திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு! நடிகர் துல்கர் சல்மான் ‘கிங் ஆப் கோதா ‘ திரைப்படத்தில் நடித்துள்ளார். கிங் ஆப் கோதா திரைப்படத்தினை அபிலாஷ் ஜோதி இயக்கியுள்ளார். ஜி ஸ்டூடியோஸ் மற்றும் வேஃபேரா பிலிம்ஸ் இணைந்து படத்தினைத் தயாரித்துள்ளது. கிங் ஆப் கோதா திரைப்படத்தில் ஜேக்ஸ் பினாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் நிமிஷ் ரவி ஒளி பதிவினை மேற்கொண்டுள்ளார்.
‘கிங் ஆப் கோதா’ திரைப்படத்தின் டீசர்கள் வெளியாகுவதைத் தொடர்ந்து திரைப்படத்தில் முதல் பாடலான ‘கலாட்டா காரன்’ பாடலின் ப்ரோமோ வீடியோவினை படக் குழு வெளியிட்டுள்ளது.. இந்தப் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரையுலகில் 11 ஆண்டுகளாக இருக்கும் துல்கர் சல்மான் வாழ்க்கை சிறப்பிக்கும் வகையில் ‘கிங் காங் கோதா ‘திரைப்படம் ஓணம் பண்டிகை அன்று வெளியாகும் என்று தகவலைப் படக் குழு தெரிவித்துள்ளது