தீவுத்திடலில் உணவுத் திருவிழா! செப்டம்பர் 16 ,17, 18 ஆகிய நாட்களில்…

தீவுத்திடலில் உணவுத் திருவிழா! செப்டம்பர் 16 ,17, 18 ஆகிய நாட்களில்…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீவுத்திடலில் உணவுத் திருவிழா செப்டம்பர் 16, 17, 18 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகமும்  இணைந்து இந்நிகழ்ச்சியை  நடத்துகிறது. இதில் மக்கள் உடலுக்கு  ஏற்ற உணவு வகைகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன அதிலும் குறிப்பாக சிறுதானிய வகைகள், பல வகையான நெல் வகைகள் குறித்த பலவகையான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு நாடுகளைச் சார்ந்த உணவு வகைகள் குறைந்த விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுத் திருவிழாவில் 150 க்கு மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சிறுதானிய  உணவுகளுக்கு மட்டும் தனியே பல அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சைவ-அசைவ உணவுகள் உணவு திருவிழாவில் சிறப்பு அம்சமாக உள்ளன. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உணவுத் திருவிழாவானது நடைபெறும். மக்கள் அனைவரும்   உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டு பிடித்த உணவுகளை உண்டு மகிழலாம்.

Related post

செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா  இன்று முதல் ஆரம்பம்!

செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா இன்று முதல் ஆரம்பம்!

 சென்னை செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா கோலாகலம் . சென்ற வருடம் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உணவுத் திருவிழாவைப் போன்று இந்த வருடமும் பிரம்மாண்டமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 24ஆம் தேதி  தமிழ் திரையுலக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 24ஆம் தேதி தமிழ் திரையுலக சார்பாக…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி தமிழ் திரையுலக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கட்சி தலைவர்களின் சார்பாக கலைஞர்…
கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது

கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நினைவாக ரூ.100 நாணயம் வெளியிடப்படுவதாக தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து…