தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு ரயில்டிக்கெட் விற்று தீர்ந்தன!

தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு ரயில்டிக்கெட் விற்று தீர்ந்தன!

தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு ரயில் டிக்கெட் விற்று தீர்ந்தன. தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு ரயில் டிக்கெட் பத்து நிமிடங்களில் விற்று தீர்ந்தன. இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக தீபாவளி பண்டிகைகான ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்னரே தொடங்கப்படும். அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் புதன்கிழமை காலை (ஜூலை 12) இன்று 8 மணி அளவில் கவுண்டரில்  தொடங்கப்பட்டது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம் 10 மணி முதல் டிக்கெட்கள் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில் 10 நிமிடங்களில் மதுரை செல்லும் பாண்டியன் மற்றும் திருநெல்வேலி செல்லும் நெல்லை விரைவு ரயில்கள் இரண்டாம் வகுப்பு படுக்கை டிக்கெட்கள் விற்று தீந்தன.

மேலும் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி  கூடிய ரயில்  டிக்கெட்களும்  பத்து நிமிடங்களில் விற்கப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related post

தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு அமேசான் ஃப்லிப்கார்ட்  நிறுவனங்களில் தள்ளுபடி  சலுகைகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் ஃப்லிப்கார்ட் நிறுவனங்களில் தள்ளுபடி சலுகைகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு flipkart ,amazon போன்ற ஆன்லைன் நிறுவனங்களில் பல தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆடை வகைகள் உயர்தர ஆடை வகைகள், அலங்காரப் பொருட்கள் எலக்ட்ரான் சம்பந்தப்பட்ட…
தீபாவளி  பண்டிகையை   முன்னிட்டு பொதுமக்களுக்கு -சென்னை மாநகர  காவல்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு -சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 13-ஆம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள்…
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு  ஊக்குத்தொகையை  தமிழக அரசு வழங்குகிறது .

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்குத்தொகையை தமிழக அரசு வழங்குகிறது .

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையை தமிழக அரசு வழங்குகிறது.. கரும்பு விவசாயிகளுக்கான ரூபாய் 253.70 கோடி ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.…