தமிழ்நாட்டில் (அக்டோபர் 31)ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந் நிலையில் புதுச்சேரியில் (அக்டோபர் 31)ஆம் தேதி தீபாவளி அன்று 2 இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது..
தீபாவளி அன்று காலை 6:00 மணி முதல் 7:00 மணி நேரமும், இரவு 7 மணி முதல் 8:00 மணி வரையும், பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் , மருத்துவமனைகள் கோவில்கள், பள்ளிகள் மற்றும் கல்விக்கூடங்களில் சுற்றுவட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.