தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

தீபாவளிக்கு  பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை  உச்சநீதிமன்றத்தின்  அதிரடி தீர்ப்பு!

இந்த வருடம் 2023 நவம்பர் மாதம் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ‘பட்டாசு வெடிக்கும் நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை’ என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்காக 2 மணி நேரம் அனுமதி உள்ளது .அதாவது காலை (6:00 மணி முதல் 7.00 மணி நேரம்) வரையும், இரவு மாலை 7.00 மணி முதல் 8.00 மணி நேரம் வரையும், பட்டாசு வெடிக்கும் நேரங்கள் அனுமதி அளித்துள்ளது. மேலும் பேரியம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்கள் பட்டாசில் சேர்க்கப்படுவதால் உடலுக்கு பாதிப்பு உண்டாகும் சுற்றுச்சூழல் கேடு உண்டாகும் என மனு தாக்கல் எழுந்த நிலையில் ‘தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகளை அனுமதிக்க முடியாது ‘என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் குறைந்த புகை வரக் கூடிய பட்டாசுகள்,சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு பசுமை வாய்ந்த பட்டாசுகளையும் ,குழந்தைகளை பாதிக்காத வெடிக்கும் பட்டாசுகளுக்கும் மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ‘பட்டாசு வெடிக்கும் நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை ‘என்ற தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ளது.

Related post

தீபாவளி  பண்டிகையை   முன்னிட்டு பொதுமக்களுக்கு -சென்னை மாநகர  காவல்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு -சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 13-ஆம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள்…