திரை உலக இயக்குனர் மனோபாலா இன்று காலமானார்!

திரை உலக  இயக்குனர் மனோபாலா இன்று காலமானார்!

திரை உலக  இயக்குனர் மனோபாலா (69வயது) இன்று காலமானார் .  தமிழ் திரைப்பட உலகில் இயக்குனர், நடிகருமான மனோபாலா இன்று (மே 3) உடல் நலக்குறைவால் காலமானார். மனோபாலா அவர்கள் 15 நாட்களாக கல்லீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனை காரணமாக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் சிகிச்சை பலனின்றி காலமானார். தஞ்சை மாவட்டத்தில் மருங்கூர் என்ற ஊரில் 1953ல் டிசம்பர் 8 அன்று பிறந்தவர். இவரின் நிஜ பெயர் பாலச்சந்தர். திரை உலகில் பயணித்த இவர் தனது பெயரை மனோபாலா என மாற்றி அமைத்துள்ளார்.  ஓவியம் சார்ந்த படிப்பை முடித்த இவர் சிறந்த ஓவியர் .

பாரதிராஜாவின் துணை இயக்குனராக பணியாற்றி 1980 இல் ‘ஆகாய கங்கை ‘என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் , பிள்ளை நிலா, உள்ளிட்ட 24 படங்களையும் இயக்கி உள்ளார். பல வேடங்களிலும் குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை உணர்வுடன் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிதாமகன், கஜினி போன்ற 200க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி  நடிப்பில் நடித்துள்ளார்.  கடைசியாக 2002ஆம் ஆண்டு ஜெயராம் நடித்த ‘நைனா’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் மனோபாலா மறைவிற்கு ரஜினி ,கருணாஸ் போன்ற பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மனோபாலாவின்  இறுதி சடங்கு நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

Related post

தூரிகைகளின் வேந்தர்’ பிரபல ஓவியர் மாருதி காலமானார்!

தூரிகைகளின் வேந்தர்’ பிரபல ஓவியர் மாருதி காலமானார்!

தூரிகைகளின் வேந்தர்’ பிரபல ஓவியர் மாருதி காலமானார்! ‘தூரிகைகளின் வேந்தர்’ பிரபல ஓவியர் மாருதி காலமானார். பிரபல ஓவியர் மாருதி புதுக்கோட்டையில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் பி.ரங்கநாதன் .…
கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்!

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்!

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்! கேரள மாநிலம் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை (4.25) மணியளவில் காலமானார். இவரின் வயது…