திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்ட திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்ட திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழித் தேரோட்ட விழா மார்ச் 21-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது.திருவாரூரில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள புகழ் பெற்ற பழமை வாய்ந்த தியாகராஜர் கோயிலாக திகழ்கிறது. இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் தேரோட்ட விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தேரோட்ட விழா தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து வருகிற மார்ச் 21ஆம் தேதி திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்ட விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக மார்ச் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related post