திருவாரூரில் கலைஞர் கோட்டம் இன்று திறப்பு!

திருவாரூரில் கலைஞர்  கோட்டம் இன்று  திறப்பு!

கலைஞர் கோட்டம் இன்று  திறப்பு. திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தைப் பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  (ஜூன் 20) இன்று திறந்து வைத்தார் . தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கருணாநிதி அவர்களின் 100ஆவது பிறந்த நாளை நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூரில் கலைஞர் கோட்டம் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த  கலைஞர் கோட்டம் 7000 சதுர அடியில் ரூபாய் 12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

இங்கு கலைஞரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் கோட்டத்தில் 2 திருமண மண்டபங்கள், அருங்காட்சியகம், முத்துவேலர் நூலகம் அமையப் பெற்றுள்ளது.  பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கலைஞர் கோட்டத்தில் கட்டப்பட்டுள்ள   முத்துவேலர் நூலகத்தைத் திறந்து வைத்தார்.  இந்த திறப்பு விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.மேலும் கலைஞர் கோட்ட திறப்பு விழா முன்னிட்டு வைரமுத்து தலைமையில் கவியரங்கமும் ,சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் நடைபெற உள்ளது.

Related post