ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோயில் ஐந்தாம் வருடம் அபிஷேக விழா. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ராள்ளாபாடி கிராமத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த சீரடி சாய்பாபா திருக்கோவிலில் (ஜூன் 15)வியாழக்கிழமை இன்று ஐந்தாம் வருடம் அபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு 108 பக்தர்கள் காப்பு கட்டி பால்குடம் எடுத்தனர். குமார பேட்டை அச்சாத்தம்மன் கோவிலிலிருந்து மேள தாளங்களுடன் சுமார் ஒரு கிலோ தூரம் வரை ஊர்வலம் பக்தர்கள் நடைபாதையாக பால்குடம் எடுத்தனர். பின்னர் இந்தக் கோவிலின் மூலவர் சிலை சாய் பாபாவிற்கு பக்தர்கள் தனது கரங்களால் பால் அபிஷேகம் செய்தனர்.
இதன் பிறகு கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம் ,பாபா மூல மந்திர ஹோமம் , என சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோயிலின் சார்பாக பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இந்த சாய்பாபா கோவிலில் ஐந்தாம் வருட அபிஷேக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சிவா சாய சேவா அறக்கட்டளை மிகச் சிறப்பாக செய்திருந்தது .