திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்!

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரியில் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆறு வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. சிறுவாபுரி முருகர் கோயிலில் நேற்றைய தினம்கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இக்கோயிலில் ஆறு நாட்களும் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு18 ம் தேதி சூரசம்ஹாரம், 19ஆம் தேதி முருகர் திருக்கல்யாணமும் மிக சிறப்பாக நடைபெறும்.

மேலும் மூலவர் முருகப் பெருமானுக்கு தீபாராதனைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்.சிறுவாபுரி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா முன்னிட்டும் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது .இந்த கோயிலின் செயல் அலுவலர் தலைமையில் கந்த சஷ்டி விழா நடத்தப்பட்டு பக்தர்களுக்கான பிரசாதங்களும் அன்னதானங்களும் வழங்கப்படுகின்றன

Related post

திருத்தணி முருகர் கோயிலில் நவம்பர் 14ஆம் தேதி கந்த சஷ்டி  தொடக்க விழா ஆரம்பம் !

திருத்தணி முருகர் கோயிலில் நவம்பர் 14ஆம் தேதி கந்த சஷ்டி தொடக்க…

திருத்தணி முருகர் கோயிலில் வருகிற நவம்பர் 14ஆம் தேதி முதல் கந்த சஷ்டி விழா ஆரம்பமாகிறது. இவ்விழாவின் தொடக்கமாக வருகிற நவம்பர் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி…