திருவள்ளூர் ஊத்துக்கோட்டை மாவட்டம் ஆரணி அருகே பெரியபாளையம் அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மாதம் 14 ஆவது வாரம் அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந் நிலையில் ஆடி மாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்களிலிருந்து பெரியபாளையம் கோயிலுக்கு வருகின்றனர். தமிழக முதலமைச்சர் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் சுமார் 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி காணொளி காட்சி மூலம் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பெரியபாளையத்தம்மன் கோயிலின் குடமுழக்கு விழாவை முன்னிட்டு நேற்றைய தினம் பாலாலயம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெரியபாளையத்தம்மன் கோயிலில் குடமுழக்கு விழாவை முன்னிட்டு தடுப்பு வேலிகள், மண்டபப் பணிகள், கோபுரங்களுக்கு வண்ணம் பூசுதல் மற்றும் மூலவர் சன்னதி புணரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. விரைவாக குடமுழுக்கு விழாவும் நடைபெறும் என அக்கோயில் நிர்வாகமும் தெரிவித்துள்ளது.