திருவள்ளூர் ஊத்துக்கோட்டை ஸ்ரீ மகா காலபைரவர் கோயில் சிறப்பு வழிபாடு இன்று நடைபெறுகிறது!

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை ஸ்ரீ மகா காலபைரவர் கோயில் சிறப்பு வழிபாடு இன்று நடைபெறுகிறது!

 திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் தொம்பரம்பேடு கிராமத்தில் ஸ்ரீ மகா காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. தொம்பரம்பேடு ஸ்ரீ மகா காலபைரவர் கோயிலில் அஷ்டமி தேய்பிறை விழா ஒவ்வொரு மாதமும் சிறப்பாக நடைபெறும். இந்த மாதம் ஏப்ரல் 2-ஆம் தேதி இன்று அஷ்டமி பூஜை விழா முன்னிட்டு யாகசாலை அமைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.இக்கோயிலின் மூலவரான காலபைரவருக்குச் சிறப்பு அபிஷேக பூஜைகள் தீப ஆதாரனைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டன. இந்தச் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமே செய்திருந்தது. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் ஐந்தாவது தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களையும் தீரும், வறுமையும் ஒழியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே இக்கோயிலில் அஷ்டமி தேய்பிறை நாளில் காலபைரவரை வணங்குவதற்காக பக்தர்கள் ஏராளமாக வந்திருந்தனர்.

Related post

ஈரோடு  மாவட்டம் அவல்பூந்துறை காலபைரவர் கோயில் தை அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை காலபைரவர் கோயில் தை அமாவாசை முன்னிட்டு பக்தர்கள்…

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ராட்டை சுற்றி பாளையத்தில் மிகப்பெரிய காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. சென்ற ஆண்டில் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் சிறப்பு 39…
தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு விழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு விழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு விழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு. தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா மிகச் சிறப்பாக  நடைபெற்று வருகிறது. ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் காவிரி…