திருவண்ணாமலையில் வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு மகா அபிஷேகம் ஆராதனை!

திருவண்ணாமலையில் வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு மகா அபிஷேகம் ஆராதனை!

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் வைகாசி மாதம் அமாவாசை முன்னிட்டு (ஜூன் 6)இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உற்சவ மூர்த்தியான சுவாமிக்கு மகா அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 

இதில் அண்ணாமலையாருக்கு சந்தனம், தேன், பால் மற்றும் விபூதி போன்ற பூஜை பொருட்களை வைத்து அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெற்றது. இக் காட்சாயைக் காண்பதற்காக பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று ‘சிவசிவ’ என வழிப்பட்டனர். மேலும் திருவண்ணாமலையில் கூட்ட நெரிசலையும் ,போக்குவரத்து நெரிசலையும் குறைப்பதற்காக போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

Related post

திருவண்ணாமலையில் தீபத்திரு கார்த்திகை விழா இன்று முதல் ஆரம்பம்!

திருவண்ணாமலையில் தீபத்திரு கார்த்திகை விழா இன்று முதல் ஆரம்பம்!

கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு திருவண்ணாமலை கோயிலில் தீபத் திருவிழா இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை கோயில் திறக்கப்பட்டு சுவாமி அண்ணாமலையாருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள்…