திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் (டிசம்பர் 13) நாளை காலை பரணி தீபம் ,மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதை காண்பதற்காக பல்லாயிரம் கோடி பக்தர்கள் அண்ணாமலைக்குக் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள். இந்நிலையில் கனமழை பெய்து வருகிறது .திருவண்ணாமலையில் உள்ள வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக திருவண்ணாமலை மலையின் மேற்பகுதியில் அதிக ஈரப்பதம் இருப்பதாகவும், பாறைகள் உருண்டு விழும் ஆபத்தும், மண்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்தும் இருப்பதாகவும் ஆய்வுக்குழுவினர் எச்சரித்துள்ளனர். எனவே திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் திருவண்ணாமலை மலையேற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது !என்றஅறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந் நிலையில் தமிழக அரசின் சார்பாக மீட்பு பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.