திருவண்ணாமலையில் தீபத்திரு கார்த்திகை விழா இன்று முதல் ஆரம்பம்!

திருவண்ணாமலையில் தீபத்திரு கார்த்திகை விழா இன்று முதல் ஆரம்பம்!

கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு திருவண்ணாமலை கோயிலில் தீபத் திருவிழா இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை கோயில் திறக்கப்பட்டு சுவாமி அண்ணாமலையாருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து விநாயகர், முருகர்,பராசக்தி, சண்டிகேஷ்வர் ஆகிய கடவுளுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தீபத் கார்த்திகை விழாவின் தொடக்க நாளாக இன்று அருணாச்சலஸ்வரர் சன்னிதியில் 64 அடி உயரம் கொண்ட தங்கக்கொடி மரத்தில் அரோகரா ‘ அரோகரா’ என்று பக்தர்கள் பக்தி முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கொடியேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை கோயிலில் 10 நாட்களாக தீபத் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த பத்து நாட்களும் காலை, இரவு என இரண்டு வேலைகளும் சாமி அண்ணாமலையார் திரு வீதி உலா வருவார். இக்கோயிலில் பத்தாம் நாளான நவம்பர் 26 ஆம் தேதி அதிகாலை கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு திருக்கோயில் பின்புறம் உள்ள மலையில் 2,668 அடி உயரம் கொண்ட விளக்கு தீபம் ஏற்றப்படும். இதை காண்பதற்காக கோடி மக்கள் இங்கு வருவார்கள்.

Related post

திருவண்ணாமலையில் வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு மகா அபிஷேகம் ஆராதனை!

திருவண்ணாமலையில் வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு மகா அபிஷேகம் ஆராதனை!

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் வைகாசி மாதம் அமாவாசை முன்னிட்டு (ஜூன்…