திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் திருத்தேரோட்ட விழா கோலாகலம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் திருத்தேரோட்ட விழா கோலாகலம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் ஏழாம் நாளான இன்று திரு தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் தீபதிருக்கார்த்திகையின் ஏழாம் நாளான இன்று அண்ணாமலையாருக்கு அரோகரா !அரோகரா !எனப் பக்தர்கள் கோஷமிட்டு வடம் பிடித்து தேரினை இழுத்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பஞ்ச ரத மூர்த்திகளும் ஐந்து தேர்களும் பவனி இன்று காலை முதல் இரவு வரை நடைபெறுகிறது. . இந்நிலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள், முக்கிய சந்திப்புகளில் அதிநவீன சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மகாதீப பெருவிழா நடைபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே தீப திருக்கார்த்திகை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Related post