திருமணம் ஆகாதவர்களுக்கு குட் நியூஸ் – ஹரியானா அரசு!

திருமணம் ஆகாதவர்களுக்கு குட் நியூஸ் – ஹரியானா அரசு!

திருமணம் ஆகாதவர்களுக்கு     குட் நியூஸ்     – ஹரியானா அரசு     ஹரியானாவில் திருமணம் ஆகாதவர்களுக்கு மாதம்தோறும்  ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.                திருமணம் ஆகாதவர்களுக்கு  மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்க இருப்பதாக ஹரியானா அரசு முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.  ஹரியானாவில் 45 முதல் 60 வயதுடைய திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு  ஓய்வூதியமாக மாதம் 2750 வழங்கப்பட உள்ளது.  அதன் படி அவர்களின் ஆண்டு வருமானம் 1.8 லட்சத்திற்கு உள்ளதாக இருந்தால்  ஓய்வூதியம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் 40 முதல் 60 வயதிற்கு   மேலாக துணையை இழந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ரூபாய் 2750 ஓய்வூதியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்காக ஒவ்வொரு மாதம் 20 கோடி ரூபாய்  ஹரியான அரசு ஒதுக்கீடு  செய்துள்ளது.

இதனால் 240 கோடி கூடுதலாக செலவினம் செய்யப்படும் என ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. கணக்கெடுப்பின்படி  ஹரியானா மாநிலத்தில் 65000 திருமணமாகாத ஆண்கள் பெண்கள் உள்ளனர் . கணவரை இழந்த பெண்கள் 5687 பேர் ஆக உள்ளனர் என்ற தகவலை ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. பொது மக்களின் தனிப்பட்ட தேவையைப்  பூர்த்தி செய்யும் நோக்கத்தில் திட்டத்தினை  ஹரியானா அரசு மேற்கொண்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள்  பெருமளவில் வரவேற்று வருகின்றனர் .

Related post