திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது

திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்ப உற்சவம் புதன்கிழமை 20 ஆம் தேதியிலிருந்து ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. தெப்ப உற்சவத்தின் முதல் நாளாக சீதாதேவி, ராமர் ,லட்சுமணர் ,ஆஞ்சநேயர் ஆகிய உற்சவர்கள் தெப்பத்தில் எழுத்தருளி காட்சியளித்தனர். 

இரண்டாம் நாளாக நேற்றைய தினம் கிருஷ்ணா ருக்மணி தேவியுடன் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருளினை வழங்கினார். தெப்ப உற்சவத்தின் மூன்றாவது நாளாக 23ஆம் தேதி இன்று மாலை தெப்ப உற்சவ விழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது. இந் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் சன்னிதியின் குளத்தில் நடைபெறும் தெப்ப உற்சவ திருவிழாவைக் காண்பதற்காக பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது.

Related post

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்ப உற்சவம் விழாக்கோலாகலம் !

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்ப உற்சவம் விழாக்கோலாகலம் !

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. திருச்சி மாரியம்மன் சமயபுரம் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது. இதனைத்…