திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில்  பக்தர்கள் கூட்டம்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. காரைக்கால் அடுத்த திருநள்ளாற்றில் உலகப் புகழ்பெற்ற தர்பார்ண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் வார சனிக்கிழமை தோறும் பக்தர்கள் வந்து சிறப்பு ஆராதனை வழிபாடு செய்வார்கள். இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதம். 20 .12 .23ஆம் தேதி 5:30 மணியளவில் சனிக்கிழமை குரு பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் இன்று அதிகாலை முதலே திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் சனீஸ்வரர் இன்று வெள்ளி கவசத்தில் அருள் தந்தார் .

சனீஸ்வர பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற பிறகு பக்தர்கள் எள் தீபம் ஏற்றியும் சிறப்பு வழிபாடும் செய்திருந்தனர். மேலும் போலீசார் பாதுகாப்பில் இருந்ததால் வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நேர்த்தியாக நின்று சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.

Related post