திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்ட விழா கொண்டாட்டம்!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்  சித்திரை தேரோட்ட விழா கொண்டாட்டம்!

திருச்சியில் உலகப் புகழ்பெற்ற பழமையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழா (ஏப்ரல் 29)ஆம் தேதி கொடியேற்றுத் தொடங்கப்பட்டு ரங்கநாதருக்குச் சிறப்பு பூஜைகளும் மாலை நேரத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் (மே 6) இன்று நடைபெற்றது. 

தேரோட்ட விழாவின் முக்கிய நிகழ்சியான ஆண்டாள் சூடிக்கொடுத்த பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ரங்கநாதருக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மே 8-ஆம் தேதி ஆளும் பல்லக்குடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.மேலும் ஸ்ரீரங்கநாதர் கோயிலின் தேரோட்ட விழாவை முன்னிட்டு திருச்சியில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related post