திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. திருச்சி மாரியம்மன் சமயபுரம் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தெப்ப உற்சவ விழாவும் கோயிலில் தொடங்கப்பட்டு 8-ஆம் நாளாளில் குதிரை வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் குதிரை வாகனத்தில் அருள் தந்தார். இக்கோயிலில் ந 9-ஆம்நாள் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்ப திரு விழாவில் மூன்று முறை மாரியம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் தந்தார். அப்போது வான வேடிக்கைகள் 8:40 மணியளவில் நிகழ்த்தப்பட்டு பக்தர்கள் ஏராளமாக கண்டுகளித்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் இணை ஆணையர் கல்யாணி, மணியக்காரர் பழனிவேல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.