திருச்சியில் வேளாண் கண் காட்சி திறப்பு – தமிழக முதலமைச்சர்!

திருச்சியில் வேளாண் கண் காட்சி  திறப்பு – தமிழக முதலமைச்சர்!

தமிழக முதலமைச்சர் திருச்சியில் நடைபெற்ற வேளாண் கண் காட்சியைத் திறந்து வைத்தார் – தமிழகமுதலமைச்சர். திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரியில் வேளாண் கண்காட்சி இன்று (ஜூலை 27) தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த வேளாண் கண்காட்சி ஜூலை 27 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த வேளாண் கண்காட்சி 300 அரங்குகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் கே.என் நேரு,  எம்.ஆர்.கோ.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு ,அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலர் பங்கேற்றனர்.  இந்த ‘வேளாண் சங்கம் 2023’ கண்காட்சியில் வேளாண்மை, தோட்டக்கலை தொடர்பான புதிய தொழில்நுட்பம், அரசின் நலத்திட்டங்கள், மரக்கன்று ,காய்கறி விதைகள் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

இந்த ‘வேளாண் சங்கம் 2023 ‘ தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றியதில் ‘பழங்கள், காய்கறிகள் என எல்லாம் ஒரே இடத்தில் பார்ப்பது கண்ணுக்குப் பசுமை  காட்சியை அளிக்கிறது என்றார்.அதன் பிறகு பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கினார். மேலும் வேளாண் தொழிலுக்கு தேவையான 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் 15 ஆயிரத்திற்கும் மேலான விவசாயிகள்  பங்கேற்றனர்.

Related post

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

 ‌ பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இதில் 91.55 %தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் 399152 லட்சம் மாணவர்களை விட 422591 லட்சம் மாணவிகளே…
திருச்சி ஸ்ரீரங்கம்  ரங்கநாத கோயில் டிசம்பர் 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத கோயில் டிசம்பர் 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு!

திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று( டிசம்பர் 12) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோயிலில் கர்ப்பகிரகத்தில் திரு நெடுதாண்டகம் இன்று மாலை7 மணியளவில் நடைபெறுகிறது.…
திமுக பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் மகளிர் அணி கூட்டம்

திமுக பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் மகளிர் அணி கூட்டம்

திருச்சியில் செப்டம்பர் 26 ஆம் தேதி திமுக பொதுச்செயலாளர் கனிமொழி அவர்களின் தலைமையில் திமுக மகளிர் அணி கூட்டம் நடைபெறுகிறது. சென்னை நந்தனம் ஓ எம் சி ஏ…