தமிழக முதலமைச்சர் திருச்சியில் நடைபெற்ற வேளாண் கண் காட்சியைத் திறந்து வைத்தார் – தமிழகமுதலமைச்சர். திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரியில் வேளாண் கண்காட்சி இன்று (ஜூலை 27) தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த வேளாண் கண்காட்சி ஜூலை 27 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த வேளாண் கண்காட்சி 300 அரங்குகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் கே.என் நேரு, எம்.ஆர்.கோ.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு ,அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலர் பங்கேற்றனர். இந்த ‘வேளாண் சங்கம் 2023’ கண்காட்சியில் வேளாண்மை, தோட்டக்கலை தொடர்பான புதிய தொழில்நுட்பம், அரசின் நலத்திட்டங்கள், மரக்கன்று ,காய்கறி விதைகள் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
இந்த ‘வேளாண் சங்கம் 2023 ‘ தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றியதில் ‘பழங்கள், காய்கறிகள் என எல்லாம் ஒரே இடத்தில் பார்ப்பது கண்ணுக்குப் பசுமை காட்சியை அளிக்கிறது என்றார்.அதன் பிறகு பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கினார். மேலும் வேளாண் தொழிலுக்கு தேவையான 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் 15 ஆயிரத்திற்கும் மேலான விவசாயிகள் பங்கேற்றனர்.