சென்னை தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமான ஆகாய நடை பாதை வருகிற மே மாதம் முதல் வாரத்தில் திறக்கப்பட உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தியாகராய நகரில் தினந்தோறும் பல்லாயிரம் கணக்கான மக்கள் வந்து செல்லும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகிறது. இங்கு மக்கள்நெரிசலை குறைப்பதற்காக ஆகாய நடைபாதை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. இத்திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு ரூபாய் 23 கோடி நிதி ஒதுக்கீட்டில் பணிகள் தொடங்கப்பட்டது. இது 600 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்க திட்டமிட்டது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஆண்டு 2022 தொடங்கி ஆகாய நடைபாதை பணியினைத் தொடங்கி வேகமாக துரிதப்படுத்தி முடிக்கப்பட்டது.
மாம்பலம் ரயில் நிலையம் மேட்லி சந்திப்புக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தை இணைக்கும் 570 மீட்டர் நீளம் 4.2 மீட்டர் அகலம் உள்ளதாகவும் நடைபாதை மேம்பாலத்தில் இரு முனைகளிலும் லிப்ட்டுகள், மற்றும் பேருந்தின் நிலையத்தின் முனையில் ஒரு எக்ஸ்லேட்டர், சிசிடி கண்காணிப்பு, பொது முகவரி அமைப்பு மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையமும் சேர்த்து இணைக்கப்பட்டுள்ளது. ஆகாய நடைபாதை பணிகள் நிறைவடைந்து உள்ளதாகவும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிற மே மாதம் திறக்கப்பட உள்ளதாகவும்” சென்னை மாநகராட்சியானது தெரிவித்துள்ளது.