திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல்… அண்ணாமலை வீடியோ வெளியீடு!

திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல்…  அண்ணாமலை வீடியோ   வெளியீடு!

தி.மு.க அமைச்சர்களின் சொத்து விவரங்களை பாஜக தலைவர் இன்று (14.4.2023)வெளியிட்டுள்ளார். திமுகவினர் சொத்து பட்டியலை ஆதாரங்களுடன்  தமிழ்ப் புத்தாண்டான இன்று சென்னை தியாகராய நகரில் பாஜக தலைமை அலுவலமான கமலாலயத்தில் காலை 10:15 மணிக்கு செய்தியாளர்கள் முன்னிலையில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்  அண்ணாமலை.

தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமு.க எம்.பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவை அண்ணாமலை வெளியிட்டார். இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அண்ணாமலை தெரிவித்தார். சி.பி.ஐ இயக்குனரிடம் நேரடியாக புகார்  கொடுத்துள்ள அண்ணாமலை இதில் மத்திய அரசின் 15 சதவீத பங்கு இருப்பதால் இதனை சி.பி.ஐ விசாரிக்க முழு உரிமை உள்ளது. இது நம்  ஜனநாயகத்திற்கான போராட்டம் என்று  வீடியோவினை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை நிரூபிக்க தவறினால் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என ஆர்.எஸ். பாரதி  எச்சரித்துள்ளார்.

 

Related post