திண்டுக்கல் மாணவி நந்தினி 600/600 மதிப்பெண்கள் பெற்று சாதனை!

திண்டுக்கல் மாணவி நந்தினி 600/600 மதிப்பெண்கள் பெற்று சாதனை!

தமிழகத்தில்பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்று வரை நிறைவடைந்தது. தமிழ்நாட்டில்   8.17 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் 29 மையங்களில் நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில் மே ஏழாம் தேதி நீட் தேர்வு நடந்ததால்  எட்டாம் தேதி12 ஆம் வகுப்பு பொதுத்  தேர்வு முடிவுகள் வெளியானது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகளின் அதிகம் தேர்ச்சி பெற்றனர். மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணி அளவில் வெளியிடப்பட வேண்டியது சற்று தாமதமாக9.55 வெளியிடப்பட்டது.  பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகளின் சதவிகிதம் 96.3ஆகும். சென்ற ஆண்டு விட இந்த ஆண்டு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.

பன்னிரண்டாம் ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600/600 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார். தமிழ்,ஆங்கிலம் ,வணிகவியல்,கணக்குப்பதிவியல்,பொருளியல், கணினி பயன்பாடுகள் ஆகிய பாடங்களில் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். அண்ணாமலையார் பள்ளியில் படித்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவி முதலிடம் பிடித்ததற்கு மாணவியின் கடின உழைப்பை காரணம் என்று பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Related post

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலம்

திண்டுக்கல் மாவட்டம் மூன்றாம் படை வீடான பழனியில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 2024 தைப்பூச திருவிழாவை…
டி.என். பி.எல்  சுற்றில்  கோவை- திண்டுக்கல் மோதல்!

டி.என். பி.எல் சுற்றில் கோவை- திண்டுக்கல் மோதல்!

 டி.என். பி.எல்  சுற்றில்  கோவை- திண்டுக்கல் மோதல்;  ஏழாவது   டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 8அணிகள் பங்கேற்றனர்.…