தாம்பரத்தில் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி!

தாம்பரத்தில் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி!

தாம்பரத்தில் ரயில்வே மைதானத்திற்கு அருகே நடைபெற்றுக் கொண்டிருக்கும் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி வருகிற ஜூன் மாதம் வரை நடைபெற உள்ளது. தாம்பரத்தில் ரயில்வே மைதானத்தில்   நுழைவாயிலின் அருகே பிரம்மாண்டமான லண்டன் பிரிட்ஜ் செட் நல்ல வரவேற்பாக அமைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசல் லண்டன் பிரிட்ஜ் போலவே அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து. யானை, புலி, சிங்கம் போன்ற விலங்குகளின் பொம்மைகள், மரங்கள் கொண்ட டிஸ்னி லேண்ட் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் வந்து விளையாடும் வகையில் வகையில் 3டி சுவர்கள், மேஜிக் ஹவுஸ், டெக்னோஜம்ப் ,வாட்டர் ரோலர், டோரா ,ஆடும் குதிரை எனப் பலவிதங்களில் விளையாட்டுத்திடல்  பார்ப்பதற்கு அழகாக  அமைக்கப்பட்டுள்ளன.

வட  இந்திய தென்னிந்திய உணவு வகைகள் , தின்பண்டங்களுடன் கூடிய ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன.  இங்கு விளையாட்டுப் பொருட்கள் முதல் வீட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் வகையில் நடந்து செல்லும் வழித்தடங்களில் ஷாப்பிங் செய்யும் அளவிற்கு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடு போல தோற்றமளிக்கும் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி  ஜூன் மாதம் வரை நடைபெற உள்ளது. லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி கோடைகால விடுமுறைக்கு அனைவரும் கண்டுகளிக்க சிறப்பான இடம் .

Related post