தமிழ் கணினி மாநாடு 2024 ஆம் ஆண்டு நடைபெறும்- தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ் கணினி மாநாடு  2024 ஆம் ஆண்டு நடைபெறும்- தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

‘தமிழ் கணினி மாநாடு’ வருகிற வருடம் 2024 பிப்ரவரி மாதம் 8, 9 ,10 தேதிகளில் நடைபெறும் எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் 1999 ஆம் ஆண்டு ‘தமிழ் இணையம் 99’ நடைபெற்றது. தற்போது 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ‘தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு’ நடைபெறயிருக்கிறது. சென்னை நந்தம்பாக்கம் உள்ள வர்த்தக மையத்தில் மாநாடு நடைபெற உள்ளது .

தமிழ் மொழியின் நிலைப்பற்றி ஆராயவும், விவாதிக்கவும், புதிய சிந்தனைகளை உருவாக்கவும் ‘தமிழ் என்று கணினி மாநாடு திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவர்களிடையே தமிழ் மொழி புலமை பெற்று ,தமிழின் தனித்தன்மை , சிறப்பு என வளர்ச்சியடையும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related post