‘தமிழ்’ என்ற வார்த்தை அமைப்பில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு!

‘தமிழ்’ என்ற வார்த்தை அமைப்பில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு!

தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார்.மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது இந்த விவாதத்தில் பதில் அளித்து பேசிய அமைச்சர் அமைச்சர் மெய்யநாதன், நிலவில் இருந்து பார்க்கும் போதும் தெரியும் வகையில், 100 ஏக்கர் பரப்பளவில் ‘தமிழ்’ என்ற வார்த்தை அமைப்பில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் இந்த அறிவிப்பை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் புதிய அறிப்புகளை வெளியிட்டார். பொதுமக்கள் அதிக அளவு கூடும் மையங்களில் சூழலுக்கு உகந்த பழக்கவழக்கங்களை ஊக்குவிக்க ரூ.50 லட்சத்தில் சூழலுக்கு உகந்த வாழ்வியல் சான்றிதழ் வழங்கப்படும்.கால நிலை மாற்றத்திற்கு ஏற்ப வாழும் வகையில் அதிக அளவு இளம் மாணவர்கள் தயார்படுத்த 50 பள்ளிகளில் ரூ.3.7 கோடியில் பசுமைப் பள்ளிகள் திட்டத்தை விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. நீர் நிலை பாதுகாப்பில் சிறந்த பணியாற்றும் 100 நபர்களுக்கு நீர் நிலை பாதுகாவலர் விருது வழங்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். என்று அமைச்சர் மெய்யநாதன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

Related post