தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று (9 தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை) 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மழை பெய்யக்கூடும். இந்நிலையில் இன்றும் ,நாளையும் தென்கிழக்கு அரபிக்கடல் அதை சுற்றியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தச் சூறாவளி காற்றானது 40 லிருந்து 55 கிலோமீட்டர் வேகத்துடன் இடைவிடாது வீசும் என்பதால் இன்றும் ,நாளையும் மீனவர்கள் மீன் பிடிக்க கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related post

தமிழ்நாட்டில் நவம்பர் 30ஆம் தேதி வலுவான புயல்!

தமிழ்நாட்டில் நவம்பர் 30ஆம் தேதி வலுவான புயல்!

இந்த வருடம் வடகிழக்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. இதுவரை எந்த வித புயலும் ஏற்படவில்லை.சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது .…
தமிழ்நாட்டில்  நவம்பர் 22 முதல் 26ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் நவம்பர் 22 முதல் 26ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 22 முதல் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு . தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர்…