தமிழ்நாட்டில் (2023-2024) வரும் கல்வியாண்டிற்கு சித்த மருத்துவ படிப்புகளுக்கு இன்று விண்ணப்பிக்கலாம் !

தமிழ்நாட்டில் (2023-2024) வரும் கல்வியாண்டிற்கு சித்த மருத்துவ படிப்புகளுக்கு இன்று விண்ணப்பிக்கலாம் !

தமிழ்நாட்டில் (2023 -2024) வரும் கல்வியாண்டில் சித்த மருத்துவ மேற்படிப்புக்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள எம் .டி சித்த மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு அக்டோபர் 6 முதல் தேதி விண்ணப்பிக்கலாம் என்று ஹோமியோபதி துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இதற்காக (www.tnhealth.ntn.gov.in) சுகாதாரத்துறை வலைத்தளங்களில் முகவரிகளில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நாளாக அக்டோபர் 20ஆம் தேதி வரை சித்த மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு சித்த மருத்துவர் கல்லூரிகளில் நுழைவு தேர்வு ,அடிப்படை தகுதி, தரவரிசை ,கலந்தாய்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post