தமிழ்நாட்டில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் அதிரடியாக உயர்வு!

தமிழ்நாட்டில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் அதிரடியாக உயர்வு!

தமிழ்நாட்டில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ,வண்டலூர் உயிரியல் பூங்கா என்றும் ‘சிறப்பு மிருக காட்சி சாலை’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உயிரியல் பூங்காவில் 17 வகையினைச் சேர்ந்த 1977 வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 20 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா போன்றவைகளின் நுழைவு கட்டணத்தையும் தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது. இந்த உயிரியல் பூங்காக்களில் வாழும் வனவிலங்குகளின் பராமரிப்பிற்காகவும் , வருகை தரும் பார்வையாளர்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் நுழைவு கட்டணத்தை தற்போது உயர்த்தியுள்ளது. தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெரியவர்கள் நுழைவு கட்டணம் 115 ரூபாயிலிருந்து 200 ஆக நிர்ணயித்துள்ளது.ரூ .5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ,மாற்றுத்திறனாளிகளுக்கும் நுழைவு கட்டணம் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளது.

 

Related post

தமிழகத்தில்  ஆவின் நிறுவனத்தில் ஐஸ்கிரீம்கள் விலை 5 ரூபாய் உயர்வு!

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் ஐஸ்கிரீம்கள் விலை 5 ரூபாய் உயர்வு!

ஆவின் நிறுவனம் தான் உற்பத்தி செய்யும் நான்கு வகையான ஐஸ்கிரீன்களின் வகையை உயர்த்தி உள்ளது. ஆவின் நிறுவனத்தில் சாக்கோபார், பால் (Ball) வெண்ணிலா, கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன்…
ஆசிரியர்களின் பிள்ளைகளின் உயர்  கல்வி உதவித் தொகை உயர்வு-தமிழக அரசு வெளியீடு!

ஆசிரியர்களின் பிள்ளைகளின் உயர் கல்வி உதவித் தொகை உயர்வு-தமிழக அரசு வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வித்உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஓய்வு பெற்ற ,உயிரிழந்த ஆசிரியர்களின் பிள்ளைகளின் உயர்கல்வி படிப்பிற்கு…
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டண உயர்வு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டண உயர்வு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கிண்டியில் இயங்கி வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை ,முதுநிலை படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கான…